எனது பயணம்
- Home /
- எனது பயணம்
மானமும் அறிவும் உள்ள மனிதனாக வாழ வேண்டும் என்ற தந்தை பெரியாரின் பாடம். டாக்டர் அம்பேத்கர் பௌத்தம் தழுவியபோது எடுத்துக்கொண்ட 22 உறுதிமொழிகளின்படி வாழ வேண்டும் என்ற வாழ்க்கையின் லட்சியம். காதலித்த காலங்களில் நாங்கள் பேசிப் பேசி எடுத்த முடிவுகளின்படி வாழ வேண்டும் என்ற எங்களின் லட்சிய வேட்கை. இவற்றினை பால பாடமாகக் கற்றுக்கொண்டால்தான், இதில் வெற்றி பெற்றால்தான் அடுத்த பரீட்சைக்குப் பயணமாக முடியும். அடுத்த பரீட்சை என்பது அக்னிப் பரீட்சை. புத்த மதத்திற்குள் நுழைவதற்குத்தான் இது பாலபாடம் பௌத்தத்திற்கு நுழைவது என்று முடிவு செய்துவிட்டோம். அதற்குள் செல்ல பெரியாரின் கைத்தடியை ஓர் ஊன்று கோலாகவும், டாக்டர் அம்பேத்கரின் நூலறிவை மறு கையிலும் பிடித்துக்கொண்டுதான் புத்தத்திற்குள் முதலடி எடுத்து வைக்க முடியும். பௌத்தம் என்ற மாபெரும் அறிவுசார் உலகிற்குள் பிரவேசிக்க இந்த இருபெரும் மேதைகளின் துணையோடுதான் செல்ல முடியும். இல்லையென்றால் உள்ளே நுழைந்த வேகத்தோடு அடித்த பந்துபோல் வெளியேற வேண்டியிருக்கும்