மேட்டுக்குடி தலித்துகளுக்கு

  • Home /
  • மேட்டுக்குடி தலித்துகளுக்கு

மேட்டுக்குடி தலித்துகளுக்கு

டாக்டர் அம்பேத்கர் என்ற ஒரு தனிமனிதன் உங்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தராமல் இருந்திருந்தால் இந்நேரம் நீங்களும் பிராய்லர் கோழிகளாக வளர்க்கப்பட்டு வரும் உங்களது வாரிசுகளும் எந்தச் சுடுகாட்டில் பிணம் எரித்துக் கொண்டிருப்பீர்கள்? இல்லை, எந்த இழவு வீட்டில் தப்படித்துக் கொண்டிருப்பீர்கள்? அப்படியே ஒரு கற்பனை செய்து பாருங்கள். எரிந்துகொண்டிருப்பது பிணம் மட்டுமல்ல. உங்களின் இன்றைய போலி இந்துமத பெருமிதமும்தான். உயர்நீதிமன்ற நீதிபதிகளாகவும், மருத்துவர்களாகவுமா இருந்திருப்பீர்கள். எனது கற்பனையில் இருந்து இதை எழுதவில்லை. உங்கள் அப்பா அல்லது தாத்தாவிலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் பாருங்கள். இதற்குப் புத்தகத்தை எடுத்து வரலாறு படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. நீங்களே இந்து மதத்தாலும் இந்துக் கடவுள்களாலும் அவமானப்படுத்தப் பட்டுத்தானே வருகின்றீர்கள்? உங்களை இழிவுபடுத்தும் ஒருவனோடு தன்மானம் இருந்தால் நட்பும் உறவும் உங்களுக்கு வருமா? அப்படியிருக்க உங்கள் பிறப்பையே இழிவுபடுத்தும் ஒரு மதம் உங்களுக்கு எப்படி இனிக்கிறது?

Book Description